பெரும் போக உற்பத்தியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு…

பெரும் போக உற்பத்தியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்த போக உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் வரையில் 4 மாத காலப்பகுதிக்கு 10,000 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்கள் விவசாய பாதுகாப்புச் சபையிடம் உண்டு.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பாதிப்பிற்கான முழுமையான தொகை வைப்பீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நெல் உற்பத்திக்கு மேலதிகமாக ஏனைய ஊடுபயிர், தேயிலை, கறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கும் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதனால் விவசாயிகளும் தமது உற்பத்திக் காணியை காப்புறுதி செய்வதில் ஆர்வம் செலுத்த வேண்டுமெனவும் விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.