பெரு அணிக்கு எதிரான கோபா அமெரிக்க கால்பந்து லீக் போட்டியில் நெய்மர் ஒரு கோல் அடித்து கைகொடுக்க பிரேசில் அணி வெற்றியை தன் வசப்படுத்தியது.
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடைபெற்று வருகின்றது.
இதில் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
டெமுகோ நகரில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் பிரேசில், பெரு அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் பெரு அணியின் கிறிஸ்டியன் முதல் கோல் அடித்தார்.
இதற்கு 4வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் போராடிய இரு அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்நிலையில் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90 + 1வது நிமிடம்) பிரேசிலி்ன் காஸ்டா ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.