பெர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம், மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய சிதைந்த குரல் பதிவு உள்ளடங்கிய இறுவட்டு ஒன்றை குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று(28) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த இறுவட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த குரல் பதிவு உள்ளடங்கிய இறுவட்டை அரசாங்க இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு இதன் போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய இது குறித்த வழக்கு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.