சுமார் 4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை நேற்று(26) வௌிநாட்டிற்கு கடத்த முயன்ற தம்பதிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதிகளில் மனைவி மாத்தளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கணவர் குவைத் நாட்டு பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
3 மில்லியன் ரூபா இலங்கை நாணயத்தாள்கள் மற்றும் 1.4 மில்லியன் ரூபா பெறுமதியான குவைத் டினார் உட்பட நாணயங்களையே குறித்த தம்பதிகள் இவ்வாறு கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.