பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் மூவர் கைது…

சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்களை, இன்று(26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் காலி மற்றும் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 2,490,000 ரூபா பெறுமதியுடைய, 249 வௌிநாட்டு சிகரட் பெக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 49,800 சிகரட்டுகள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.