பெறுமதி சேர் வரியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, தாக்கல் செய்த மனுக்களை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆராய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
விமல் வீரவன்ஸ உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், சட்டவிரோதமானது என மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத்தினால், மேற்கொள்ளப்படும் சட்டமூல திருத்தத்தின் ஊடாக மாத்திரம் வரி அறவீடுகளை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு செய்யாது, நேரடியாக வரிகளை அதிகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், வரிகள் அதிகரிக்கப்பட்டமையை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு மனுதார்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.