Update – பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாடு பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (14) கையளிக்கப்பட்டுள்ளது.

—————-Update 02:11 Pm

கடந்த வாரம் நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பாக ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை இன்று(14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இன்று(14) கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் வைத்து குறித்த அமைச்சரவை உபகுழு அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 7ஆம் திகதி மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.