(FASTGOSSIP | COLOMBO) – அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட பெலியத்த ரயில் நிலையத்திற்குத் திரும்பும் பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ள அவதான நிலை ஏற்பட்டுள்ளது.
மாத்தறை – பெலியத்த ரயில் பாதை கடந்த 08 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இதற்காக 278.2 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோ தெரிவிக்கையில்;
“..நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட நிறுவனம் 02 வருட பூரண உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.
எனினும், பெலியத்த ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கியின் தரம் தொடர்பில் சந்தேகம் எழுகிறது.. இது தொடர்பில் திணைக்களம் விரிவாக ஆராயவுள்ளது..” என ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.