பெலும்மாஹார – மிரிஸ்ஸவத்த வீதியில் செல்ல சாரதிகளுக்கு தடை..

கண்டி வீதியின் பெலும்மாஹார – மிரிஸ்ஸவத்த வரையான வீதியின் போக்குவரத்து, இன்று(23) நள்ளிரவு வரை தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் மேற்கொள்ளப்படும் சில புனரமைப்பு பணிகள் காரணமாகவே, இந்த வீதியில் போக்குவரத்து செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.