(FASTNEWS | COLOMBO) – குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட வீரபொகுன விஜித மத்திய மகா வித்தியாலயத்தின் முஸ்லிம் மத பாடசாலை மாணவன் ஒருவனுக்காக வழங்கப்பட வேண்டிய உச்ச கெளரவமானது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது கடந்த 15ம் திகதி இரவு 07 மணியளவில் வீரபொகுன புவக்கஹகடவள பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமடைந்த குறித்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.எல்.டில்ஷான் கான் எனும் 17 வயதுடைய மாணவின் இறுதிச் சடங்குகளுக்காக குறித்த பாடசாலை வழங்கப்பட்டிருந்தமையே ஆகும்.
பெளத்த முறைக்கு முன்னுரிமை வழங்கி மகா சங்கத்தினர் தலைமையில், வீரபொகுன விஜித மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் டில்ஷானின் உடலானது இறுதி அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீரபொகுன விஜித மத்திய மகா வித்தியாலயத்திற்கு அன்றைய தினம் இன மத வேறுபாடு இன்றி பெரும் திரளான மக்கள் உயிரிழந்த குறித்த மாணவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அவரது உடலுக்கு அருகே மகா சங்கத்தினர் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள், மௌலவிகள் உள்ளிட்டோரும் அமர்ந்திருக்க, ‘பக்தியின் ஆன்மாக்களின் தியாகம்’ மற்றும் போதி பூஜை ஆகியவை பெளத்த சம்பிரதாயப்படி மகா சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக வீரபொகுன நாகின தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.