‘‘பெஷாவர் ஷல்மி அணி PSL. தொடரை கைப்பற்றினால் ஒட்டுமொத்த அணி வீரர்களும் மொட்டையடிப்போம்..” – சமி…

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் உரிமையாளர் உள்பட அனைத்து வீரர்கள் மொட்டையடித்துக் கொள்வோம் என்று ஷமி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று(05) பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஷல்மி அணியும், பாகிஸ்தான் கெப்டன் சர்பிராஸ் அகமது தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

டேரன் சமி எப்போதும் நகைச்சுவையாக பேசக்கூடியர். சமியுடன், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முன்னணி வீரர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உங்களது மொட்டைத்தலை மற்றும் சேவிங் செய்த முகம் பிடிக்கும் எனக்கூறியுள்ளார்.

அப்போது சமி பதிலளிக்கையில் ‘‘பெஷாவர் ஷல்மி அணி பி.எஸ்.எல். தொடரை கைப்பற்றினால் ஒட்டுமொத்த அணி வீரர்களும் மொட்டையடித்துக் கொள்வோம். எங்களுடன் அணியின் உரிமையாளரும் ஆன ஜாவெத் அப்ரிடியும் மொட்டையடித்துக் கொள்வார்’’ என்று கூறியுள்ளார்.