(FASTNEWS | COLOMBO) – பொசன் உற்சவ நிகழ்வுகளை முன்னிட்டு அநுராதபுரத்தில் 8000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்படவுள்ளதாக அநுராதபுரம் வலய பொலிஸ்அத்தியட்சகர் திலினஹேவா பத்திரன தெரிவித்திருந்தார்.
பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வலயங்களின் பாதுகாப்புக்காக 4000 பொலிஸாரும் 2000 இராணுவ வீரர்களும் 1000 சிவில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கடற்படையினர் என மொத்தம் 8000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.