பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள பதவி குறித்து அஞ்ச வேண்டாம் – நிதியமைச்சர்..

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள பதவி குறித்து தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் நிதியமைச்சர் கோரியுள்ளார்.

கோட்டையில் உள்ள நிதி அமைச்சில் நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

கடந்த ஆட்சியின் அராஜக போக்குக்கு நாட்டை நாம் கொண்டு செல்ல மாட்டோம். நாட்டை குழப்பும் சதி காரர்களிடம் இருந்து தக்க பதலளிக்கும் நோக்குடனே பொன்சேகாவிற்கு புதிய பதவி வழங்கவுள்ளோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் அந்நிய செலாவணி தொடர்பான புதிய சட்டமூலத்தின் ஊடாக எமது நாட்டவர்கள் வெளிநாடுகளில் வைப்பு செய்துள்ள பணங்களை இலங்கை கொண்டு வருவதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எனவே இலங்கையில் பூரண பாதுகாப்பை நாம் வழங்குவோம். உங்களுடைய பணங்களை வெளிநாடுகளில் வைப்பு செய்யாமல் இலங்கையில் வைப்பு செய்யுங்கள். மாறாக சட்டவிரோத முறையில் அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் வைப்பு செய்தால் எந்தவொரு மன்னிப்பும் வழங்கப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(rizmira)