பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட முடியாது என திறைசேரி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சீனி, பாம் எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட முயற்சிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், பேக்கரி உரிமையாளர்களின் இந்த முயற்சி முற்றிலும் பிழையானது எனவும், அவ்வாறு விலைகளை உயர்த்த வேண்டிய அவசியமில்லை எனவும் திறைசேரியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாம் எண்ணெய் மற்றும் சீனியின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட போதிலும் உள்நாட்டு சில்லறை விற்பனை சந்தையில் அவற்றுக்கான விலைகள் உயர்த்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாம் எண்ணெய் மற்றும் சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்த அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சீனியின் விலை குறைந்துள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.