ரயில்வே ஊழியர் சங்க பிரதிநிதிகள் நேற்று(10) மாலை ஜனாதிபதியின் செயலாளருடன் முன்னெடுத்த கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளமையினால், போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் மீண்டும் அறிவித்துள்ளன.
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி 12 புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#reeshmmaa..