பேச்சுவார்த்தை தோல்வியில் – 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு உறுதி…

இன்று(30) நள்ளிரவு 12.00 முதல் உறுதியாக 48மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படப் போவதாக புகையிரத சங்கள் அறிவித்துள்ளன.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால் குறித்த இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்படி ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில் நிலைய அதிபர்களும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma