பேய் பயத்தால் மாளிகையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி..!

பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி, பிரேசில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்ப வாசஸ்தலமான ஆள்வோராதா அரண்மனையிலிருந்து, ஜனாதிபதி வெளியேறிவுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரேசிலின் ஜனாதிபதியாகவுள்ள மைக்கல் டெமர் அவரது உத்தியோகப்பூர்வ வாசஸ்த்தலத்தில், பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஜனாதிபதி மாளிகையில் ஒருவகை அமானுஷிய சக்தி நடமாட்டம் இருப்பதாக கூறியும், அவரால் அரண்மனையுள் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனக்கூறி, அரண்மனையில் விசேட பூஜைகளை ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள அமானுஸ்ய செயற்பாடுகளால் குறித்த அரண்மனையில் பேயுள்ளதாக நம்பியுள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனக்கூறி, குறித்த அரண்மனையிலிருந்து வெளியேறி, துணை ஜனாதிபதியிற்கு வழங்கப்பட்டிருந்த மாளிகையில் குடியேறியுள்ளார்.

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி டில்மா மீதான ருசோப் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து, துணை ஜனாதிபதியாக விருந்த மைக்கல் டெமர் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இச்சூழ்நிலையில் பேய்ப்பயத்தை கூறி ஜனாதிபதி அரண்மனையிலிருந்து வெளியேறியுள்ளமை, அந்நாட்டு அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.