தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ, பல்வைத்திய, விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமாகவுள்ளன.
எனினும், முகாமைத்துவம் மற்றும் கலைப் பீடங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்படும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் உபுல் பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய பீடங்கள், பீடாதிபதிகளின் தீர்மானத்திற்கு அமைய திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைத் திறக்கும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்படும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.