பேராதனை பல்கலை மாணவர்களுக்கு 03 வருட வகுப்புத் தடை…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கு மூன்று வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பலகலைக்கழக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய உப பீடாதிபதி கலாநிதி உபுல் திசாநாயக்கவின் கையெழுத்துடன், குறித்த மாணவர்களுக்கான வகுப்புத் தடை குறித்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பேராதனை பலகலைக்கழக நிர்வாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக வருகைத் தந்த 8 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவர்களை நிர்வாணமாக்கி பகிடிவதைகள் செய்துள்ளமைக்கு எதிராகவே குறித்த 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-rees