பேராயர் ரஞ்சித் ஆண்டகையினால் உயர்நீதிமன்றத்தில் இன்று(01) இடையீட்டு மனு தாக்கல்

(FASTNEWS | COLOMBO) – தனிநபர் பிரேரணையாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்‌ஷவால், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறநெறி வகுப்புகளுக்கு தடையேற்படும் வகையில், ஞாயிறு மற்றும் நோன்மதி தினங்களில் பிர​த்தியேக வகுப்புகளை நடத்துவதை தடுக்கும் வகையிலான, விடுமுறை திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக, பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, இன்று(01) உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இந்த திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் ஆசிரியரான சுதத் டியகுஆராச்சி உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.