(FASTNEWS|COLOMBO) பண்டிகை காலத்தின் போது விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் அதிக கட்டணங்களை அறவிடுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
அவ்வாறு அதிக கட்டணங்கள் அறவிடப்படும் சந்தர்ப்பத்தில், 1955என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், 0117555555 மற்றும் 0771056032 தொலைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பேருந்துகளில் அதிக போக்குவரத்து கட்டணங்கள் அறவிடப்படும் பட்சத்தில், அவர்களின் வீதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.