(FASTNEWS|COLOMBO) – யட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இன்று(27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.