பேருந்து வீதி ஒழுங்கை – மூன்றாம் கட்டம் இன்று முதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று(29) காலை 6 மணி முதல் இங்குறுகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி குறித்த வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆம்ர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.