பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை முறை இன்று(15) முதல் அமுலுக்கு..

கொழும்பு நகரில் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை முறை இன்று(15) முதல் அமுலுக்கு வருகின்றது.

வாரநாட்களில் காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப் பகுதியில் குறித்த இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மொரட்டுவயிலிருந்து கொழும்பு வரையிலும், பத்தரமுல்லையிலிருந்து கொழும்பு வரையான வீதிகளிலும் 3 ஒழுங்குகளை கொண்ட பகுதிகளில் குறித்த முன்னுரிமை ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படுவதோடு, குறித்த முன்னுரிமை ஒழுங்கையில் தனியார், அரச பொதுப் பேரூந்துகள், பாடசாலை பேரூந்துகள் மற்றும் வேன்களுக்கும் பயணிக்க முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

(rizmira)