பேரூந்து கட்டணத் திருத்தம் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு, பேரூந்து சங்க தலைவர்களுக்கிடையில், இன்று(01) மாலை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக தனியார் பேரூந்து சங்கத்தின் கூட்டமைப்பு செயலாளர் அநுர பிரியஜித் தெரிவித்துள்ளார்.
நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.