(FASTNEWS | COLOMBO) – பேரூந்து கட்டணத் திருத்தமானது இன்று(01) முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு திருத்தத்தை பெற்றுக் கொடுக்காமை, பேரூந்து உரிமையாளர்களுக்கு செய்யும் அசாதாரண செயலென, பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கட்டணத் திருத்தம் இன்றிலிருந்து இடம்பெற வேண்டும் என்றும், எனினும் இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பேரூந்து கட்டணத் திருத்தத்தை வழங்காமைக் குறித்து, இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் தகவலைப் பெற நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.