பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் நாளை அமைச்சரவையில் தீர்மானம்…

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பேரூந்து கட்டண அதிகரிப்பு தொகை பற்றிய தீர்மானம், நாளை(15) அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பேரூந்து கட்டண விலை தொடர்பில் இன்று(14) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

பேரூந்து கட்டணம் 20% மாகவும், ஆகக் குறைந்த கட்டணத் தொகை 15 ரூபாவாகவும் உயர்த்தப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கோரிக்கைக்கு சாதகமாக பதில் ஏதும் கிடைக்காதவிடத்து, எதிர்வரும் 16ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பை நடாத்தவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.