பேரூந்து கட்டண அதிகரிப்புக்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் நாளை(22) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதி பெறப்பட்டதன் பின்னர் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்வைக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் பேரூந்து சங்கங்கள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.