பேரூந்து கட்டணங்கள் திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இன்று(03) முன்னெடுக்கவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்காத காரணத்தினால் குறித்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்திருந்தார்.
++++++++++++++++++++++++ UPDATE
பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று(03) தீர்மானமிக்க கலந்துரையாடல்…
பேரூந்து கட்டணங்கள் திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இன்று(03) முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே அது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
கடந்த 30ம் திகதி மீண்டுமொரு முறை டீசலின் விலையை 5 ரூபாயால் அரசாங்கம் குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.