பேரூந்து டிக்கெட்களுக்கு மாற்றீடாக இவ்வருட இறுதியில் புதிய கார்ட் முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மிகுதிப் பணம் வழங்குதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து குறித்த முறைமை அறிமுகப்படுத்துவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.