பேரூந்து பணிப்புறக்கணிப்பை கைவிடத் தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – தனியார் பேரூந்து துறையில் முகங்கொடுக்கும் சிக்கல் நிலைகள் தொடர்பில் பணிப்புறக்கணிப்பிற்கு செல்லாது கலந்துரையாடல் மட்டத்தில் தீர்மானங்களை எட்ட அனைத்து மாகாண பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் தனியார் பேரூந்து துறையில் பாரிய நட்டம் நிலவிய நிலையில் அதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்காதவிடத்து எதிர்வரும் 05ம் திகதி பேரூந்து சங்கங்கள் சில இணைந்து பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.