பேலியகொடை தீ விபத்தில் 14 வீடுகளுக்கு சேதம்

(FASTNEWS|COLOMBO ) – பேலியகொடை – போரனுகொட்டுவ பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதியில் நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பேலியகொடை பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து தீயைக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் 14 வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.