பேலியகொடயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ‘பொலிஸ்’ எனப்படும் அருண அத்தநாயக்க என்ற பொலிஸ் கான்ஸ்டள் நேற்று(31) இரவு மினுவங்கொடயில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் கைது செய்யப்படும்போது, அவரிடம் ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸாரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர், பேலியகொடயில் முன்னணி போதைப்பொருள் விற்பனையாளர்களில் ஒருவரான கிஹான் சாந்தருவன் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர், ஐஸ் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா விற்பனை செய்யும் பிரதான நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் அருணா அத்தநாயக்க என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
R.Rishma