பேஸ்புக் நிறுவனத்தின் விசேட குழு இலங்கை வருகை…

பேஸ்புக் நிறுவனத்தின் விசேட குழுவொன்று இன்று(14) இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.

பேஸ்புக் தொடர்பான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கே குறித்த குழு நாட்டிற்கு வருகைத் தருவதாக அமைச்சர் ஹரின் பொர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையிலான வன்முறைகளை ஏற்படுத்தும் செய்திகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை அந்த நேரத்திலேயே அகற்றுவதற்கான உரிமையை இதன்போது பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.