போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு…

பேரூந்து, முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள போக்குவரத்து கட்டணம், எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது உரிய முறையில் அறவிடப்படுவதாகவும் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

நேற்று(11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.