பொசன் உற்சவங்களை முன்னிட்டு, இன்று முதல் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு..

பொசன் போயா உற்சவங்களை முன்னிட்டு, இன்று(05) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு சகல மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று கலால்வரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அந்த ஏழு நாட்களும், மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களிலும் சகல இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதுமட்டுமன்றி, விசேட சுற்றிவளைப்பு தேடுதல்களும் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)