பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளில் விஷேட நிகழ்வுகள்

(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள பாடசாலைகளை கேந்திரமாக கொண்டு விஷேட தொடர் நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, பிரிவெனா பௌத்த மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கல்வி கற்கும் பாடசாலைகள் ஏனைய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்ட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் மூலம் மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண வலய மற்றும் தொகுதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் அடங்கலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.