பாதாள உலகக் கோஷ்டிச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பொடி விஜே என்றழைக்கப்படும் சிசிர குமார என்ற சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை சம்பவமொன்றுக்காக, 12 வருட காலச் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை பெற்றவரெனக் குறிப்பிடப்படும் இந்த நபரைக் கைது செய்யும் போது, அவரிடமிருந்து, வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
R.Rishma