இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி புத்தளம் – குருநாகல் வீதியிலுள்ள, டிப்போவுக்கு அருகில் வைத்து, முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர், பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரைத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், படுகாயமடைந்த பொதுச் சுகாதார பரிசோதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை உரிய நபர் கைதுசெய்யப்படவில்லை என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.