பொதுஜன பெரமுன கட்சியின் இரு வேட்புமனுக்கள் நிராகரிப்பு…

வெலிகம நகர சபை மற்றும் மஹரகம நகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு, மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியினரின் பொதுஜன முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வெலிகம நகர சபை தொடர்பில், குறித்த சார்பில் பெயரிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் உரிய வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால் குறித்த நகர சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமது கட்சி நீதிமன்றிற்கு செல்லத் தயாராவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மஹரகம நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுவில், பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்காமை காரணமாக அது நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.