உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சில பகுதிகளில், தமது கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று(23) தள்ளுபடி செய்துள்ளது.
இதன்படி, பாணதுறை, அகலவத்தை, மஹியங்கனை மற்றும் திறப்பனை ஆகிய பகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலேயே, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
#rizma