பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் கைது…

உடுதும்புர பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான செனரத் பண்டார உள்ளிட்ட நான்கு பேர் நேற்று(27) இரவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் துண்டுப்பிரசுரங்கள் ஓட்டும் வேளையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது சட்டம் கடுமையாக அமுலில் இருக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#reeshma