(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரத்தை கைவிட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ போன்ற படித்தவர், தினமும் 20 மணி நேரம் மக்களுக்கு சேவை செய்யும் நபரை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுஜன பெரமுனவினர் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாத சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.