(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுயாதீனமாக செயற்பட தீர்மனித்துள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளன. இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாசவுக்கு இடையே போட்டி நிலை நிலவுகிறது.
இந்நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு அப்பதவி வழங்கப்படாவிட்டால் பாராளுமன்றத்திற்குள் சுயாதீனமாக செயற்பட ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் ஆதரவு அணியினர் தீர்மனித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் பொதுத்தேர்தலில் தனித்து புதிய சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடவும் சஜித் ஆதரவு அணியினர் முடிவெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.