2019 ஜனவரி 05ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக சுயாதீனமாக போட்டியிடும் குழுக்களால் வைப்பிடும் பிணைப் பணம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை(10) வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சிக்காக பிணை பணம் வைப்பிலிடுவது கட்டாயம் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற தேர்தல் சட்டங்களின் 10வது உறுப்புரைக்கு அமைய சுயாதீனக் குழுவினால் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் தலா 2000 ரூபாவாக ஆட்சேர்ப்பு அதிகாரியிடம் பிணைப் பணமாக வைப்பிலிட வேண்டும்.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர், கம்பஹா மாவட்டத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர், குருணாகல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களாக 15 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுபப்பினர்கள் 12 பேரும், இரத்தினபுரிக்கு 11 பேரும், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு தலா 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளதோடு, அனுராதபுர மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலா 09 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
புத்தளம், நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 08 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படும்.
மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களுக்கு தலா 07 பாராளுமன்ற உறுப்பினர்களும், வன்னி மற்றும் மொனராகல ஆகிய மாவட்டங்களுக்கு தலா 06 பாராளுமன்ற உறுப்பினர்களும், தெரிவு செய்யப்படும்.
மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்காக தலா 05 பாராளுமன்ற உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்திற்கு நான்கு பேரும் பராளுமன்றிற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர்.