பொதுநலவாய வணிக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(18) பிரதான உரையாற்றவுள்ளார்
நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் இன்று(18) இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி நேற்றைய தினம்(17) பிரித்தானியாவின் பிரதி ஆணையாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் அதேவேளை இளைஞர், மகளிர் மற்றும் வர்த்தக மாநாடுகளும் இடம்பெறவுள்ளன.
பொதுநலவாய விளையாட்டு மாநாட்டில் பங்கேற்வுள்ள ஜனாதிபதி மைத்திரபாலசிறிசேன அதன் பின்னர் பிரித்தானிய மகா ராணியின் 92 ஆவது பிறந்த தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.