பொதுபல சேனாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களை பரப்பும் முகநூல் பக்கம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி திலந்த விதானகே பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;
“நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றி குறித்து பொதுபல சேனா அமைப்பு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் ராஜகீய பண்டித கலகொடஅத்தே ஞானசார தேரர் மனப்பூர்வமாக நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் குறித்து பொய்யான செய்தியினை Lanka Express பெயரில் இயங்கும் facebook பக்கத்தில் https://www.facebook.com/LankaExpress.Lk/posts/414930815608978 பதிவு செய்யப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. நமது அமைப்பு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு வழங்கவில்லை, அவ்வாறானதொரு அறிவிப்பொன்றினை கலகொடஅத்தே ஞானசார தேரர் எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
மக்களை திசை திருப்பி நமது அமைப்பினை மற்றும் ராஜகீய பண்டித கலகொடஅத்தே ஞானசார தேரரை சங்கட நிலைக்கு ஆளாக்கவும் இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பும் நபர் மற்றும் குழுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#rishma