பொதுபல சேனா அமைப்பின் ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு – மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பாதிப்பு..

முன்கூட்டியே திட்டமிட்டபடி தனது ஆதரவாளர்களுடன் பொதுபலசேனா உள்ளிட்ட பெளத்த அமைப்புக்கள் பல இன்று(03) மட்டக்களப்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சிறு சலனம் ஏற்பட்டது.

இதனால் கொழும்பு – மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரைக்கும் (2:11pm)அவர்கள் மட்டக்களப்பு செல்ல பொலிசாரால் அனுமதிக்கப்படவில்லை.

UPDATE _

மட்டக்களப்பில் இன்று(03) பொதுபலசேனா உட்பட இனவாத அமைப்புக்கள் ஒன்றுகூடவிருந்த நிலையில் அப்பகுதியில் ஊர்வலம், போராட்டம் மற்றும் இனமுறுகலை ஏற்படுத்த கூடிய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதவான் இந்த தடை உத்த்ரவை பிறப்பித்துள்ளார்.

இனவாத கருத்துக்களை வெளியிட்டுவரும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களை மட்டக்களப்பிற்குள் அனுமதிக்க வேண்டாமென பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே மேற்படி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

குறித்த வீடியோ;