பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு…

(FASTNEWS|COLOMBO) அறிவிக்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தில், இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய 12,299 இராணுவ வீரர்கள் மீண்டும் சரணடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது

இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் 22ம் திகதி அறிவிக்கப்பட்டது. குறித்த பொதுமன்னிப்பு காலம் மே மாதம் 10 ஆம் திகதி வரை வழங்கப்பட்டு பின்னர் அது நேற்றைய தினம் வரை நீடிக்கப்பட்டது.