(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 40 இற்கு மேற்பட்ட விளையாட்டு கழகங்கள், 35 இற்கு மேற்பட்ட இளைஞர் கழகங்கள் அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை கொண்ட பொத்துவில் பிரதேசத்தில் இதுவரையில் பொதுமைதானம் இன்மையால் பொத்துவில் சுயாதீன இளைஞர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் விளையாட்டு பொது மைதானம் கோரி பேரனி ஒன்றை இன்று முன்னெடுத்தனர். இன்று காலை முன்னெடுக்கப்பட்ட பேரனி பிரதான வீதியின் ஊடாக பொத்துவில் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் சுயாதீன இளைஞர்கள் மகஜர் ஒன்றினை ஒப்படைத்தனர். இவ் மைதானத்திற்கான காணி கடந்த காலங்களில் பொத்துவில் -அக்கறைப்பற்று பிரதான வீதியில் அருகாமையில் இருந்தது. எனவே குறித்த இடத்தினை பொதுமைதானத்திற்காக கோரி குறித்த பேரனியின் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மூவின மக்களுடன் தேசிய சர்வதேச வீரர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு இளைஞர் கழகங்கள், விளையாட்டு நடுவர், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குறித்த விடயம் தொடர்பாக துரிதமாக செயற்படுவதாக பிரதேச செயலாளர் பேரனியில் கலந்துகொண்டவர்களிடம் தெரிவித்தாக சுயாதீன இளைஞர் பொருப்பாளர் சட்டத்தரனி A.சாதிரிடம் தெரிவித்தார். இந்த செயற்பாடு மைதானம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் இளைஞர் கழக சம்மேளன தலைவர் B.பசூர்கான் தெரிவித்தார்.
-B.Basoorkhan Jp-